96 பட பாணியில் *ரீ யூனியன் செய்து அசத்திய முன்னாள் பள்ளி மாணவர்கள். ||
#old_students
#போரூர்
#CaptainNews |
#TamilNews
96 பட பாணியில் *ரீ யூனியன் செய்து அசத்தியது மட்டுமல்லாமல் தங்கள் பள்ளியையும் புதுப்பித்து கொடுத்துள்ளனர் போரூர் அரசினர் பள்ளி முன்னாள் மாணவர்கள்.சென்னை போரூரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 1992 முதல் 1996 வரையிலான கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் 100க்கும் மேற்போட்டோர் தங்களது குடும்பத்துடன் மீண்டும் தங்கள் பள்ளியில் ஒன்று கூடினர். மாணவர்கள் மட்டுமல்லாது தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கண்டறிந்து அவர்களையும் சந்தித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர் முன்னாள் மாணவர்கள். மேலும் தற்போது அப்பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவர்களை தேர்தெடுத்து பரிசுகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
வாட்ஸ் அப் குழு மூலம் மீண்டும் தங்கள் நட்பு வட்டாரத்தை ஒன்றிணைத்த அவர்கள், பள்ளியின் வளர்ச்சிக்காக குறிப்பிட்ட தொகையை திரட்டியுள்ளனர். அத்தொகையின் மூலம், பள்ளிக்கு புதிதாக மின் மின்விசிரிகள், தண்ணீர் தொட்டிகள் மேலும் புதிதாக மின் இணைப்புகளும் அமைக்க உள்ளனர். பள்ளிக்கு புது வண்ணம் பூசி, சுவர்களை வரைபடங்கள் மூலம் அலங்கரித்தள்ளனர்.
23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்களது நண்பர்களை அதே பள்ளியில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தகவும், தங்களது தோழிகளையும் தோழர்களையும் அவர்களது குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் சந்தித்து பூரிப்பை ஏற்படுத்தியாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
96 பட பாணியில் *ரீ யூனியன் செய்து அசத்திய முன்னாள் பள்ளி மாணவர்கள். #போரூர் video phone beyonce mp3 | |
| 30 Likes | 30 Dislikes |
| 953 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 15 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét