தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
#CaptainNews |
#TamilNews
#tamilnaduassembly
#edappadi
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந் தேதி கூடிய நிலையில், இம்மாதம் 1-ந் தேதிமுதல் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, கடந்த 9-ந் தேதி முதல் காலை, மாலை என இருவேளைகளில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் பேரவைக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை, இந்து சமய அறநிலையத் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் விவாதம் நடைபெற உள்ளது. இதில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கிறார். தொடர்ந்து, துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.இதேபோல், மாலை 4.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை, இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பதில் அளிக்க உள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. video phone beyonce mp3 | |
| 4 Likes | 4 Dislikes |
| 100 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 15 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét