காவிரி ஆணையத்தின் மூன்றாவது ஆலோசனை கூட்டம்
#காவிரி_மேலாண்மை_ஆணையம் #CaptainNews | #TamilNews
நடப்பு ஆண்டுக்கான காவிரி ஆணையத்தின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் டில்லியில் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் டெல்லி சென்றனர்.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை காவிரி மேலாண்மை ஆணையம் இறுதி செய்துள்ளது. இந்த நீரை கர்நாடகா வழங்குவதை உறுதிப்படுத்த மாதந்தோறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும். கடந்தாண்டு இந்த கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை.
கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் காவிரி ஆணைய கூட்டம் நடைபெற்றுது. ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. மற்றும் ஜூலையில் 31.2 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பின்பற்றி கர்நாடக அரசு முறையாக நீர் வழங்கவில்லை.இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான மூன்றாவது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைறுகிறது.. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.
மத்திய நீர்வள ஆணைய தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அருண்குமார் சின்ஹா தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஜூன் மற்றும் ஜூலை நிலுவை நீருடன், ஆகஸ்ட் மாதத்திற்கான 45.93 டி.எம்.சி. நீரை வழங்க தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர்.
மேலும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்க உள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

காவிரி ஆணையத்தின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் video phone beyonce mp3 | |
1 Likes | 1 Dislikes |
40 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 24 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét