ஒரு லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
#Kanchipuram #Athi_Varadhar #CaptainNews | #TamilNews
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
அத்திவரதரை தரிசிக்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 1-ம் தேதி தொடங்கிய அத்தி வரதர் தரிசன நிகழ்வு இன்று 18-வது நாளை எட்டியுள்ளது. கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து அருள் பாலிக்கும் அத்திவரதரை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்
கடந்த செவ்வாயன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தையொட்டி பக்தர்கள் வருகை குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் கூட்டம் அலைமோதியது. இதனால் வரிசையில் பலர் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் கூட்ட நெரிசல் சிக்கி சேலத்தை சேர்ந்த ஆனந்தன், ஆவடியைச் சேர்ந்த ஜெயந்தி, ராதாமணி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நாராயணி ஆகியோர் உயிரிழந்தனர். பக்தர்கள் நிதானமாக அத்தி வரதரை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தாலும், அதிக கூட்டத்தில் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 17 நாட்களில் இல்லாத அளவிற்கு இன்று அதிகாலை முதலே காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
வாகனங்கள் நிறுத்த காஞ்சி நகருக்கு வெளியே ஆங்காங்கே வாகன நிறுத்தம் அமைத்தும், அதனை மதிக்காமல் நகருக்குள் வாகனங்கள் வருவது, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆட்டோக்களும் காஞ்சியில் இயக்கப்படுவது ஆகியவையே போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் என்று கூறும் உள்ளூர் வாகன ஓட்டிகள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்...

ஒரு லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு video phone beyonce mp3 | |
3 Likes | 3 Dislikes |
38 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 18 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét