குல்பூஷண் ஜாதவ்க்கு மரண தண்டனை -சர்வதேச நீதிமன்றம் ||
#மரண_தண்டனை
#CaptainNews |
#TamilNews
குல்பூஷண் ஜாதவ்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ். கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். வின் ரா அமைப்பிற்காக உளவு பார்த்ததாக அவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றி விட்டதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் இந்தியா தெரிவித்தது..
இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் வாதங்களை கேட்ட சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனையை தடை செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பை சென்ற பிப்ரவரி மாதம் 22-ந்தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை வழக்கறிஞர் அப்துல்காவி அஹமது யூசுப், தீர்ப்பை வாசிக்க உள்ளார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
குல்பூஷண் ஜாதவ்க்கு மரண தண்டனை -சர்வதேச நீதிமன்றம் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து | |
| 1 Likes | 1 Dislikes |
| 78 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 17 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét