நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் அனுசரிப்பு
#நடிகர்_திலகம்_சிவாஜி #CaptainNews | #TamilNews
நடிகர் திலகம் சிவாஜி 1927 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ம் தேதி தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் சின்னையா மற்றும் ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார்.
இளைய வயதில் பாடங்களை விட நாடகங்களை நோக்கியே நாட்கள் நகர்ந்தன.
ஒன்பது வயதில் வீட்டை விட்டு ஓடிவந்து நாடக குழுவில் நடிக்கத் தொடங்கினார்.
1952 ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படத்தில் பாய்ச்சல் பயணத்தைத் தொடங்கினார்.
மனோகரா, அமர தீபம், ரங்கூன்ராதா, அம்பிகாபதி, வீரபாண்டிய கட்டபொம்மன், படிக்காத மேதை, பாவமன்னிப்பும் பாசமலர், பாலும் பழமும், கப்பலோட்டிய தமிழன், ஆலயமணி, ரத்தத்திலகம், கர்ணன், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, திருவிளையாடல், கந்தன் கருணை, வசந்த மாளிகை
என நூற்றுக்கணக்கான படங்கள்
நொடிக்கு நொடிக்கு தமிழர்களின்
காதுகளுக்கு கற்கண்டு தமிழை ஊட்டினார்.
சிவாஜியின்
சிவந்த கண்களின் செவ்வானமாக விரிந்தது
புருவ மொழிகளே உருவ காதாப்பாத்திரங்களை ஊதி தள்ளியது
நடை மிடுக்கு படை வீரத்தை பந்தாடியது…
முக அசைவுகள் யுக திசைகளை மீட்டியது..
கண்ணசைவுகளே கடவுள்களை கண்ணுக்குள் தீட்டியது….
உயிர் நீத்த சுதந்திர வீரர்களூம், போராட்டத் தலைவர்களூம் சிவாஜியின் நடிப்பில் உயிர்தெழுந்தனர்.
சிவாஜியின் நகங்கள் கூட நடித்தது ....
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் அனுசரிப்பு கப்பலோட்டிய தமிழன் பாட்டு | |
| 5 Likes | 5 Dislikes |
| 229 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 21 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét